தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொது தேர்வு கால அட்டவணை வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் செப்டம்பர் 27 முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்ன அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
