2023 ஆண்டிற்க்கான ஆஸ்கார் விருது.. விருதுகளை வென்ற சிறந்த கலைஞர்கள் யார் யார்..? லிஸ்ட் இதோ..

By Ranjith Kumar

Published on:

உலகம் முழுவதும் எடுக்கப்படும் சிறந்த படங்களையும், அதில் நடித்த சிறந்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் கொடுக்கப்படும் அங்கீகாரம் தான் Oscars விருது. 1929 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அன்றிலிருந்து Oscars அவார்டு இன்று வரை வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 94 வருட காலமாக உலகில் உள்ள மிகச்சிறந்த படைப்புகளுக்கு உந்துகோலாக இந்த அகாடமி நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள மூளை முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு சினிமாவையும் தேடி கண்டறிந்து அதற்கான தகுதியான அங்கீகாரத்தை கொடுத்து ஊக்குவித்து வருகிறது இந்த அகடமி.

பல காலமாக சினிமாவிற்காகவே தன் முழு உழைப்பையும் போட்டு சிறந்த படைப்புகளையும் சிறந்த நடிப்புகளையும் கொடுக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சிறந்த அங்கீகாரமாக இந்த அவார்ட் வழங்கப்படுகிறது. தற்போது 2023 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் படைப்புகளை படைத்து சாதனைகளை உண்டாக்கிய படங்களுக்கும், படங்களில் தன் அசாத்தியமான நடிப்பை வெளிக்காட்டிய நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு 2024 ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி ஆஸ்கார் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இயக்குனர்கள், சிறந்த நடிகைகள், சிறந்த நடிகர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

   

கடந்த ஆண்டு 2023 ஆம் வருடம் சிறந்த படைப்பாக உருவாக்கப்பட்டு வெளியான “Oppenheimer” என்ற படத்திற்காக சிறந்த இயக்குனர் என்று “Christopher Nolan” அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளர் என்று “Anatomy of a fall” என்ற படத்திற்காக “Justin triet” and “Arthur harari” இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Oppenheimer என்ற படத்தில் நடித்த “Cillian Murphy” என்பவருக்கு சிறந்த நடிகர் என்று விருது வழங்கப்பட்டுள்ளது. “Poor Things” என்ற படத்தில் நடித்த நடிகையான “Emma Stone” அவர்களுக்கு சிறந்த நடிகை என்று ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் சிறந்த துணை நடிகர்கள் என்று இருவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று Oppenheimer என்ற படத்தில் Cillian Murphy உடன் துணை நடிகராக நடித்த “Robert Downey Jr” அவர்களுக்கு சிறந்த துணை நடிகர் என்றும், “The Holdovers” என்ற படத்தில் நடித்த “Da vine joy Randolph” என்றவருக்கு சிறந்த துணை நடிகை என்று விருது வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த குணச்சித்திர நடிகர்கள் என்று பலருக்கும் OSCARS விருது வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Ranjith Kumar