ஒரே ஆண்டில் நாய் கடியால் 20,000 பேர் பாதிப்பு… சென்னையை அலறவிடும் அதிர்ச்சி தகவல்…!

Spread the love

சென்னை ஐகோர்ட்டில், கோடம்பாக்கத்தை சேர்ந்த வக்கீல் தமிழ் வேந்தன், பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், ராட்வீலர் என்ற வெளிநாட்டு ரக நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானது, இந்த நாய்களுக்கு வாய் மூடி அணியாமல், அதன் உரிமையாளர்கள் வெளியில் நடை பயிற்சிக்காக அழைத்து வரக்கூடாது, என்று உத்தரவுவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த பொழுது, சென்னை பெருநகர் மாநகராட்சி கால்நடை தலைமை அதிகாரி டாக்டர் கமால் உசேன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் விதிகளின்படி செல்லப்பிராணிகள் வளர்ப்போர் உரிமம் பெற வேண்டும். அந்த உரிமைத்தை ஆன்லைன் மூலம் ₹50 கட்டணம் செலுத்தி, செல்லப்பிராணியின் புகைப்படம், அதன் உரிமையாளரின் புகைப்படம், முகவரி உள்ளிட்டவைகளை பதிவேற்றம் செய்து உரிமம் பெறலாம். உரிமம் வழங்கும் போது செல்லப்பிராணிக்கு கருத்தடை செய்திருக்க வேண்டும். தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். சாலையில் மலம் கழித்தால் அதை அதன் உரிமையாளர் சுத்தப்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 11,630 செல்லப்பிராணிகளுக்கு இதன் அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாய்க்கடி இல்லாத சென்னை என்ற இலக்கை அடைய, 9 தேதி முதல் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடஇப்பாட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், சென்னையில் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த கால்நடைத்துறை அதிகாரி, கடந்த ஆண்டு மட்டும் 20,000 பேரை, நாய்கள் கடித்துள்ளன என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், தெருநாய்களை பிடித்து கருத்தடை ஊசி போட்டு, மீண்டும் அதை தெருவில் விடுவதற்கு பதிலாக ஆவது அதற்கு உணவு அளித்து தங்கும் இடம் அமைக்கப்பட்டு பராமரிக்கலாம் நாய் கடி இல்லாமல் அதே நேரம் நாய்களையும் கொல்லாமல் இப்படி பராமரித்தால் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்
என்று தனது கருத்தை தெரிவித்தார்
தெரு நாய் கடி விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளதால் நாய் கடி சம்பவங்களை தடுக்க மாநகராட்சி என்ன நடவடிக்கையை எடுத்தது என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது
மேலும் நாய்க்கடி விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளி வைத்தது

Srimathi

Recent Posts

மக்கள் தொகையை கூட்ட புது பிளான்..! ஆந்திராவில் கூடுதல் குழந்தை பெற்றால் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்.. ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…

9 மணத்தியாலங்கள் ago

நிஜமான அதிசயம்..! ஐந்து நாட்களில் 4 குழந்தைகளை இயற்கையான முறையில் பெற்றெடுத்த பெண்.. மருத்துவ உலகையே வியக்க வைத்த உ.பி தாயின் அதிசயப் பிரசவம்…!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: டாஸ்மாக் கடைகள்… முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…

9 மணத்தியாலங்கள் ago

வாரண்ட் இல்லாமல் டிஎஸ்பி கேட்ச் பிடிக்க மாட்டார்..! முகமது சிராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…

9 மணத்தியாலங்கள் ago

வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்ல.. மனைவியையும், மகளையும் யூஸ் பண்ணிக்கோங்க… வீட்டு ஓனரிடம் கணவர் சொன்ன அதிர்ச்சி…!!

குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…

9 மணத்தியாலங்கள் ago

இனிமே வெயிட் பண்ண தேவையில்லை! பிஎஃப் பணத்தை எடுக்க சூப்பர் அப்டேட்.. புதிய ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ ரூல்ஸ்…!!

மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…

9 மணத்தியாலங்கள் ago