தேமுதிகவுக்கு ஷாக்..! “மொத்தம் 200 பேர்” கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்… உச்சகட்ட மகிழ்ச்சியில் EPS ..!!

By Soundarya on ஆவணி 26, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் முதல்வரை பிரேமலதா சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில் நலம் விசாரிக்க மட்டுமே ஸ்டாலினை சந்திக்க சென்றதாக பிரேமலதா கூறினாலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பல யூகங்களுக்கு வித்திட்டது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது பிரச்சாரத்தில் யாரையும் விமர்சிக்க போவதில்லை என்று பிரேமலதா கூறியிருந்தார். மேலும் யாரது கூட்டணி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

இதற்கிடையில் தேமுதிகவில்  இருந்து கூண்டோடு விலகியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் அரவை முத்து, அதிமுகவில் இணைந்த நிலையில், அவரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். அதன்படி மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், குளித்தலை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.