மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தற்போது மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழிகளில் உள்ள திரையரங்குகளில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் படி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் அவர்கள் இயக்கத்தில் பரவ பிலிம் ஸ்டுடியோ நிறுவனத்தின் அதிபர் பாபு சகீர் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியாகி மலையாளத்தில் பெரிதளவு ஓடியது.
ஆக்சன் மற்றும் திரில்லர் கதையான இப்படம், கொடைக்கானலுக்கு நண்பர்கள் கூடி ட்ரிப் போகும் பொழுது அங்கு நடக்கும் டிராமா காமெடி அனைத்தும் கலந்து ஒரு டிராப்பில் சிக்கிய நபரை காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதைகளாகும். இப்படத்தில் நடித்து இடம்பெற்ற சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, எஸ்.பொதுவால், லால் ஜூனியர், தீபக், பரம்போல் அபிராம், ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், விஷ்ணு ரெகு ஆகியோரின் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
படம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மலையாளத்தில் வெளியாகி, முதலில் 90 லட்சம் என்ற மிதமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்று 2 கோடி அளவில் வந்து, பின்னர் தமிழ்நாட்டில் மிதமாக ஓட ஆரம்பித்து மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி பல கோடி வரை அள்ளியது. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையுமா என்று நினைத்தபடி, கடந்த வாரம் 150 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெற்ற இப்படம் தாறுமாறு வரவேற்பை பெற்றது
தற்போத இப்படத்தின் ரெக்கார்டையே உடைத்து மாபெரும் சாதனையை முறியடித்துள்ளது. இதுவரையிலும் மலையாளத்தில் எந்த படமும் வாங்காத பாக்ஸ் ஆபிஸ் வசூலை இப்படம் பெற்றுள்ளது. கடந்த வாரம் இந்திய அளவில் 115 கோடி வசூலை பெற்று, உலக அளவில் 176 கோடி வசூலை தட்டி தூக்கி மகத்தான சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்த படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெறுமா? என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவில் 200 கொடிக்கும் மேல் வசூல் சாதனையை படைத்துள்ளது. 200 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த இப்படம், இன்னும் எதிர்பார்ப்பை தாண்டி திரையில் ஓடுவதால், படத்தின் கலெக்ஷன் 200 கோடியை தாண்டும் என்றும் தெரிய வருகிறது.
#ManjummelBoys – FIRST MALAYALAM film to enter into ₹200Cr club!
Humongous & Historic???? pic.twitter.com/LRNX8krEV2— Sreedhar Pillai (@sri50) March 19, 2024