தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. என்னதான் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகின்றார். ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் சமீப காலமாகவே திமுகவில் இணைந்து வருவதால் நாளுக்கு நாள் ஸ்டாலினுக்கு பலம் கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய அரங்கம் இன்று முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்ப பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இணைந்தவர்களை கட்சித்துண்டு அணிவித்து வரவேற்ற முதல்வர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…