“அடச்சீ.. இந்த வயசுல இப்படியா?”… 20 வயது பெண்ணை வீட்டிற்குள் இழுத்த 50 வயது நபர்…. அடுத்து நடந்த அந்த சம்பவம்…. காரைக்குடியை உலுக்கிய கொடூரம்…!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

காரைக்குடி கே.எம்.சி. காலனியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் முத்துமாரி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கராபுரம் ரோஜா வீதி பகுதியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் வழக்கம் போல் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜசேகர் என்பவர் தொடர்ந்து அவருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக, அந்தப் பெண் வீட்டின் உள்ளே சென்று குப்பைகளை எடுக்கும் சமயங்களில், அவரைப் பின்பக்கமாகக் கட்டிப்பிடித்து அநாகரிகமாக நடந்துகொண்டதோடு, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், வீட்டுக்குள் வந்துதான் குப்பைகளைப் பெற வேண்டும் என ராஜசேகர் தொடர்ந்து வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளார்.

   

இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மாநகர நல அலுவலர் மற்றும் மாநகராட்சி துப்புரவுத் துறையினரிடம் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தியுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு ‘சைக்கோ’ எனக்கூறி, அவரது செயலைத் தட்டிக்கழித்து மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றுள்ளனர். அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கே, அந்த நபர் மேலும் துணிச்சலாக அடுத்தகட்ட அத்துமீறலில் ஈடுபடுவதற்குக் காரணியாக அமைந்துள்ளது எனத் தூய்மைப் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

   

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் துணிச்சல் பெற்ற ராஜசேகர், இன்று அந்தப் பெண் அருகிலுள்ள மற்றொரு தெருவில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மீண்டும் அங்கு சென்றுள்ளார். யாரும் எதிர்பாராத வேளையில், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாகத் தனது வீட்டிற்குள் இழுக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டுத் தன்னைத் தற்காத்துக் கொண்டதோடு, உடனடியாகத் தனது மேஸ்திரிக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சக தூய்மைப் பணியாளர்கள், ராஜசேகரை முற்றுகையிட்டு அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குத் திரண்ட தூய்மைப் பணியாளர்கள், ராஜசேகர் மீது முறைப்படி புகார் அளித்தனர். அந்தப் புகாரில், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதோடு, ஆபாசமாகச் சாதியைச் சொல்லித் திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், குற்றவாளி மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களும் தங்களின் பணிகளைப் புறக்கணித்துக் காவல் நிலையத்தில் திரண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.