இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டிருப்பதால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலங்களாக கருதப்படும். இந்த காலத்தில் ஏராளமானவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகள் வசதிபெறும் விதமாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ரிட்டன் பயணம் மேற்கொள்ள வகையில் டிக்கெட் எடுத்தால் அதற்கு 20% சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 13 முதல் 26ம் தேதி வரைக்கும் பயணம் செய்ய ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும். அதேபோல நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை ரிட்டன் டிக்கெட் முன்பதிவு செய்தால் 20% சலுகை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவானது வருகிற 14-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தற்போது உள்ள நடைமுறையின் படி 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி என்ற அடிப்படையில் வருகிற 14-ஆம் தேதி தொடங்குகிறது.
