என்ன கொடுமை சார் இது… 20 பூனைகள் கொடூரக் கொலை… கைதான 24 மணி நேரத்தில் அசால்ட்டா வெளியே வந்த கொடூரன்… விலங்கு நல ஆர்வலர்கள் கொந்தளிப்பு…!

By Swetha on புரட்டாதி 16, 2026

Spread the love

செம்பூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 40 வயது நபருக்கு, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் விலங்கு நல ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் மீது மிருகவதைத் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் RCF காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல பூனைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்நபரைப் பிடித்துள்ளனர்.

   

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன், இதுபோன்ற விலங்குகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.