ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ஈபூரு மண்டலத்தில் உள்ள பொக்குராம் கிராமத்தில், தெருநாய் நக்கியதால் ரேபிஸ் நோய் பரவி 2 வயது பிஞ்சுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
சோஹன் ருத்ரான்ஷ் என்ற 2 வயதுக் குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த நாய் ஒன்று குழந்தையின் காயத்தை நக்கியுள்ளது. இச்சம்பவத்தைப் பெற்றோர் கவனிக்கத் தவறிய நிலையில், சில நாட்களுக்குப் பிறகு குழந்தையின் நடத்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தை நீரைக் கண்டு பயந்து அலறியதுடன், நீர் அருந்தவும் மறுத்துள்ளது.
உடனடியாகக் குழந்தையை நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக குண்டூர் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு ரேபிஸ் தொற்று பரவியதை உறுதி செய்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. சிறிதளவு கவனக்குறைவால் பிஞ்சுக் குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…