சமீபத்தில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா, “திமுகவில் இருப்பவர்களில் சிலர் அதிருப்தியில் உள்ளனர். சிட்டிங் திமுக அமைச்சர்கள் 2 பேர் தவெகவில் இணையவுள்ளனர். மாற்றங்கள் நடக்கப் போகிறது. அதை மக்கள் நேரிலேயே காண உள்ளனர் ” என கூறியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் குறிப்பிட்ட அமைச்சர்கள் யாராக இருக்கும்? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
