கிண்டியைச் சேர்ந்த 65 வயது தொழிலதிபர் அப்துல் காதர், பண நெருக்கடியால் ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தை அடமானம் வைக்க முடிவெடுத்தார். இந்த நிலையில் நண்பர் மூலம் அறிமுகமான மடிப்பாக்கத்தில் வசிக்கும் டெல்லி விநாயக ஆச்சார்யா (51) என்பவரிடம் சொத்தை அடமானம் வைத்தார். ஆனால் விநாயகா போலி ஆவணங்கள் உருவாக்கி சொத்தை அபகரித்து, வேறொருவருக்கு விற்றுவிட்டார்.
இதை அறிந்த அப்துல் காதர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, மோசடி உறுதி செய்தனர். தலைமறைவாக இருந்த விநாயக ஆச்சார்யாவும், சேலம் சுஜாதா (48) என்ற கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கடந்த மார்ச்சில் ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
