திடீர் பரபரப்பு… அதிமுகவிலிருந்து ஒரே நேரத்தில் விலகும் 2 முக்கிய புள்ளிகள்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on புரட்டாதி 2, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. அதே சமயம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இபிஎஸ் மீதான அதிருப்தியை அடுத்து கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி பங்கேற்றது அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் பன்னாரியும் ஐந்தாம் தேதி விலங்கு அறிவிப்பை வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.