பெண்ணிடம் நகையை பறித்த 2 இன்ஜினியர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. திடுக்கிடும் பின்னணி..!!!

Spread the love

நாமக்கல் மாவட்டம் கோனேரிபட்டியை சேர்ந்த ராஜா, மனைவி ஜெயலட்சுமி (52). இவர்கள் பூ மற்றும் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள். இருவரும் நேற்று புதுச்சத்திரம் அருகே உள்ள செம்மாம்பட்டியில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். தரிசனம் முடிந்தவுடன் மாலை அணைப்பாளையம் புறவழிச் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். பார்சல் பிரிவு அருகே சென்றிருந்தபோது ராஜா அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவுள்ளார். அப்போது அந்தப் பக்கமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் அந்த தம்பதியினரிடம் கொல்லிமலைக்கு வழி கேட்டுள்ளனர்.

திடீரென்று அந்த வாலிபர்கள் ஜெயலட்சுமி அணிந்திருந்தார் நாலரை பவுன் தாலி மற்றும் 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றுள்ளனர். காயம் அடைந்த அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி கூச்சலிட்டு உள்ளார். பகுதியில் உள்ள பொதுமக்கள் சத்தம் கேட்டு ஓடி வந்து வாலிபர்களை பிடிக்க துரத்தியுள்ளனர்.  அப்போது எதிரே வந்த சுற்றுலா வேன் வாலிபர்களின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி வாலிபர்கள் கீழே விழுந்தன பொதுமக்கள் மடக்கி பிடித்து தரும அடி கொடுத்தனர்.

அப்பகுதி மக்கள் இதைக் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அவர்களின் இருந்து ஏழரை பவுன் நகையை மீட்டனர். அந்த இளைஞர்கள் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி சேர்ந்த மாணிக்கம் மகன் பைந்தமிழன் (24) மற்றும் தீர்த்தகிரி மகன் தங்கராஜ் (25) என்பது தெரியவந்துள்ளது. பைந்தமிழன் சிவில் இன்ஜினியராம், தங்கராஜ் மெக்கானிக்கல் இன்ஜினியராம். விசாரணையில் தொழில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இதுபோன்ற நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Divyamayakannan

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

46 minutes ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

56 minutes ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

1 மணத்தியாலம் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

1 மணத்தியாலம் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

1 மணத்தியாலம் ago