நீங்க CHECK யூஸ் பண்றீங்களா?.. அதில் இருக்கும் 2 கோடுகள் பற்றி தெரியுமா?.. இதோ உங்களுக்கான விவரம்..!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் ஒரு சிலர் செக் புக் வைத்து இருக்கலாம். அதிலும் வங்கிக் கணக்கில் NRI அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் காசோலை இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய முடியாது. இந்த காசோலையில் இரண்டு கோடுகள் போடப்பட்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதனை CROSS CHECK என்று அழைப்பார்கள். இந்த கிராஸ் செக்கை பயன்படுத்துவதன் மூலமாக வங்கியில் பணத்தை பெற முடியாது. அதாவது கையில் பணத்தை பெறாமல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதனை நான்கு வகையாக பிரித்துள்ளனர்.

அதாவது செக்கில் சாதாரணமாக இரண்டு கோடுகள் போட்டு தருவது என்பது SIMPLE CROSS CHECK எனப்படும். இந்த காசோலை மூலமாக பணத்தை வங்கி கணக்கில் நாம் வரவு வைக்க முடியும். அடுத்ததாக SPECIAL CROSS CHECK என்பது காசோலையில் இரண்டு கோடுகளுக்கு நடுவில் வங்கியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பெயர் குறிப்பிட்ட வங்கியில் மட்டுமே நீங்கள் பணத்தை வரவு வைக்க இயலும்.

அடுத்து RESTRICTED CROSS CHECK என்பது காசோலையில் இடம் பெற்றிருக்கும் இரண்டு கோடுகளுக்கு நடுவே PAYEE என்று எழுதப்பட்டிருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் வங்கிக்கு சென்று பணத்தை வரவு வைக்க முடியும் என்பது அர்த்தமாகும். ஒருவேளை AC PAYEE என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வங்கிக் கணக்கை கையாளும் நபர் மட்டுமே பணத்தை வரவு வைக்க முடியும்.

இறுதியாக DOUBLE CROSS CHECK என்பது காசோலையில் இரண்டு கோடுகளில் ஒரு கோட்டுக்கு மேலே வங்கி கணக்காளரின் பெயரும் மற்றும் மற்றொரு கோட்டுக்கு மேலே வங்கியின் பெயரும் இடம் பெற்றிருக்கும். மேலும் RESTRICTED CROSS CHECK இல் இரண்டு கோடுகளுக்கு நடுவே PAYEE என்பது இடம்பெற்று இருந்தால் அந்த பெயருடைய வேறு நபரும் சென்று பணத்தை வரவு வைக்க வாய்ப்புள்ளதால் இந்த DOUBLE CROSS CHECK திட்டம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“விஜய்யின் ஆட்சிக்கு வரும் முதல் ஆபத்து?”… முதல் நாளிலேயே தீர்க்க வேண்டிய அந்த ‘பதற்றமான’ முடிவு… 2026-ல் ஸ்டாலினையே திணறடித்த விஜய்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து, நடிகர் விஜய் முதலமைச்சராகப்…

5 minutes ago

“இரவோடு இரவாக போன் போட்ட ராகுல்”… விஜயுடன் கூட்டணி சேர டீல்.? தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அச்சாரம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விஜய் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து…

6 minutes ago

“ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ்.. கைவிட்ட தொண்டர்கள்”… திமுகவின் தோல்விக்கு இதுதான் காரணமா?…. 2026 தேர்தலில் உண்மையில் நடந்தது என்ன…?

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தோல்விக்கு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுவது, பலமானதாகக்…

13 minutes ago

ஆட்சியமைக்கும் முன்பே அதிர்ச்சி…! வெற்றி பெற்றாலும் கவிழலாம்.. தவெக-வை மிரட்டும் அந்த ஒரு சிக்கல்…!!!

தமிழக அரசியல் சூழலில் 106 இடங்களை வென்றுள்ள தவெக, ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற காங்கிரஸ், விசிக, பாமக போன்ற…

15 minutes ago

தவெகவுக்கு கூடிய தொகுதி.. இரவில் நடந்த பெரிய திருப்பம்… கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்…!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக அரசியலையே அதிர வைக்கும் வகையில்…

17 minutes ago

“நான் ஜெயிப்பேன் தான் நெனச்சன்”… கண்கலங்கிய சீமான்… தமிழக மக்களை கலங்க வைத்த அந்த 5 நிமிடம்…!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் திசையையே மாற்றியமைத்துள்ளன. 15 ஆண்டுகளாகத் தமிழ் தேசியம் பேசி, களத்தில் அயராது உழைத்து…

20 minutes ago