தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் அட்டைதாரர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் அனைத்து பொருட்களும் ஒரே முறையில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 5 நாளை மற்றும் அக்டோபர் 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தமிழக கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
