இனி இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்காது… பொதுமக்களுக்கு அரசு திடீர் அதிர்ச்சி.. புதிய கட்டுப்பாடுகள் அமல்..!!

By Soundarya on ஆனி 1, 2026

Spread the love

நாட்டில் குழாய் மூலம் வழங்கப்படும் பிஎன்ஜி (PNG) இயற்கை எரிவாயு இணைப்பு பெற்று, அதே முகவரியில் பழைய எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பையும் வைத்துள்ள வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதியை அமல்படுத்தியுள்ளன. பிஎன்ஜி இணைப்பு பெற்றும் பலர் சிலிண்டர்களைச் சரண்டர் செய்யாததால், சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கவும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் பிஎன்ஜி வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், தங்களின் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களைப் புக் செய்யவோ, ரீஃபில் (Refill) செய்யவோ முடியாது. இதற்காக எண்ணெய் நிறுவனங்களின் டிஜிட்டல் தரவுத்தளங்கள் இணைக்கப்பட்டு, இரண்டு இணைப்புகளையும் பயன்படுத்துவோர் கண்டறியப்பட்டு வருகின்றனர். அதே வேளையில், பிஎன்ஜி இணைப்புகளுக்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த இரண்டு சிலிண்டர் புக்கிங்கிற்கு இடைப்பட்ட ‘லாக்-இன் பீரியட்’ (Lock-in period) கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகர்ப்புற பயனர்கள் ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு அடுத்த சிலிண்டரைப் புக் செய்ய 25 நாட்களும் (முன்பு 21 நாட்கள்), கிராமப்புற பயனர்கள் 45 நாட்களும் காத்திருக்க வேண்டும். இருப்பினும், பிஎன்ஜி வசதி இல்லாத வேறு பகுதிகளுக்கு மக்கள் குடிபெயர்ந்தால், தங்களின் பழைய எல்பிஜி கனெக்ஷனை மீண்டும் புதுப்பித்து (Activate) பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும், புதிய எல்பிஜி கனெக்ஷனுக்கான டெபாசிட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.