ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானத்தை, தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய ஈரான் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை பாரசீக வளைகுடாவில் உள்ள கெஷ்ம் தீவு அருகே ஒரு F-35 விமானத்தை வீழ்த்தியதாகக் கூறிய நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது விமானத்தையும் அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றாலும், விமானம் சேதமடைந்திருப்பதைக் குறிக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளன. முன்னதாக மார்ச் 19 அன்று நடந்த இதேபோன்ற ஒரு தாக்குதலில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அமெரிக்கா மழுப்பலாகப் பதிலளித்திருந்தது. மேலும், மார்ச் 22 அன்று வெளியிட்ட அறிக்கையில் தங்கள் போர் விமானங்கள் எதுவும் ஈரானால் அழிக்கப்படவில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக அமெரிக்காவின் ‘வெல்ல முடியாத’ போர் விமானங்களாகக் கருதப்படும் F-35 ரக விமானங்களைச் சுட்டு வீழ்த்தி வருவதாக ஈரான் கூறுவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ஈரானின் நவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் அமெரிக்காவின் மறைந்திருந்து தாக்கும் (Stealth) தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து முறியடிக்கிறதா என்ற கேள்வி ராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்காவின் மௌனமும், ஈரானின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
#BREAKING
Islamic Revolutionary Guard Corps Public Relations: #IRAN #IRGC @qudsn📌A US F-35 fighter jet was destroyed in the skies over central Iran by the IRGC’s advanced air defence system. https://t.co/sPaxv1AtkU
📌The fighter jet pictured belongs to the Lake Heath… pic.twitter.com/bhJKQmrfP2
— ⚡️🌎 World News 🌐⚡️ (@ferozwala) April 3, 2026
