“போட்டோ எடுக்க போறேன்…” கண்ணை மறைத்த ரீல்ஸ் மோகம்…. கல் குவாரியில் மூழ்கி 18 வயது மாணவன் பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் போட்டோ ஷூட் மோகத்தால் சோகம் அரங்கேறியுள்ளது. அழகான காட்சிகளைப் படம் பிடிக்கச் சென்ற 18 வயதான BTech மாணவன் ஒருவர், அங்குள்ள தண்ணீர் நிரம்பிய ஆழமான கல் குவாரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் லைக்ஸும் வியூஸும் அள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் இதுபோன்று ஆபத்தான இடங்களுக்குச் சென்று தங்களது இன்னுயிரை இழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகிய புகைப்படங்கள் எடுக்கச் சென்ற இடத்தில் மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.