“நான் சாதாரண ஆள் இல்லை”… துணிச்சல் என்றால் இதுதான்!… திருடர்களை அலறவிட்ட 18 வயது சிங்கப்பெண்… நடுரோட்டில் நடந்த திகில் சம்பவம்…!!

By Gayathri on கார்த்திகை 15, 2026

Spread the love

அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் ஒரு கணம் கூட திகைத்து நிற்காமல், சத்தமாகக் கூச்சலிட்டபடியே அந்த மோட்டார் சைக்கிளை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினாள். தப்பிக்கும் அவசரத்தில் வண்டியை வேகமாகத் திருப்ப முயன்ற அந்த இளைஞர்கள், சாலையின் ஓரத்தில் இருந்த வேகத்தடையைக் கவனிக்காமல் அதன் மீது ஏறினர். இதனால் நிலைதடுமாறிய இருவரும் சாலையில் சரிந்து விழுந்தனர்; அந்த நேரத்தில் அவள் எழுப்பிய அபயக் குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் உடனடியாக ஓடி வந்து அவர்களைச் சுற்றி வளைத்தனர்.

தப்பிக்க வழியின்றி பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட அந்த இரு இளைஞர்களுக்கும் தர்ம அடி கிடைத்தது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கீழே விழுந்ததில் காயமடைந்திருந்த இருவரையும் கைது செய்து, அந்தப் பெண்ணின் தொலைபேசியை மீட்டு அவளிடம் ஒப்படைத்தனர். ஆபத்தான சூழ்நிலையிலும் பயப்படாமல் தைரியமாகச் செயல்பட்டுத் திருடர்களைப் பிடிக்க உதவிய அந்த 18 வயது இளம்பெண்ணின் துணிச்சலைக் காவல்துறையினரும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.