சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 18 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு திருவள்ளூர் நீதிமன்றம் அடுக்கடுக்கான ஆயுள் தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரைப் பிரிந்து நஜீப்தீன் என்ற ராஜூ என்பவருடன் பூந்தமல்லியில் வசித்து வந்தார். அவருடன் அந்தப் பெண்ணின் 18 வயது மகளும் தங்கியிருந்தார். இந்நிலையில், தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ராஜூ மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்த பின், வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிக்கொண்டு ராஜூ தலைமறைவானார். வேலை முடிந்து வீடு திரும்பிய தாய், தனது மகள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு மும்பையில் பதுங்கியிருந்த ராஜூவைக் கைது செய்தனர். இந்த வழக்கானது திருவள்ளூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் ராஜூ மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்குத் தனித்தனியாக மூன்று ஆயுள் தண்டனைகளும், அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், திருட்டு குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. நீதியின் இந்த அதிரடித் தீர்ப்பு சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…