கொடூரத்தின் உச்சம்..! திருமணமான தனது சகோதரியை அடித்தே கொன்ற 18 வயது தம்பி… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

By Soundarya on ஐப்பசி 7, 2025

Spread the love

ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில், 18 வயது சிறுவன் ஒருவன் தனது 33 வயது சகோதரி குட்டையான ஆடைகளை அணிந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டையால் தாக்கி கொலை செய்தார்.  பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜந்தகலான் கிராமத்தில் வசித்து வந்தவர் ராதிகா. 2016 ஆம் ஆண்டு சிர்சாவில் உள்ள சுச்சன் கிராமத்தில் வசிக்கும் ராய் சிங்குடன் ராதிகா காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி ஃபதேஹாபாத்தில் உள்ள மாடல் டவுனில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தது.

ராதிகாவின் சகோதரர் ஹசன்பிரீத் தனது சகோதரி குட்டையான டிரெஸ் அணிவது பிடிக்கவில்லையாம். மேலும் அவரது நடத்தையிலும் சந்தேகம் கொண்டிருந்தார். இதனையடுத்து திங்கட்கிழமை அவர் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நேரத்தில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, மேலும் ஹசன்பிரீத் தனது சகோதரியின் தலையிலும் உடலிலும் பலமுறை மர மட்டையால் தாக்கினார், இதனால் அவர் பலத்த காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, சுற்றுப்புற மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த பெண்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், தகவல் கிடைத்ததும், நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.