ஹார்முஸ் நீரிணையில் முடங்கிய 18 இந்தியக் கப்பல்கள்… சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

போர்ச் சூழல் காரணமாக இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வரும் 18 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் எல்பிஜி (LPG) இறக்குமதியில் சுமார் 90 சதவீதம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்தச் சூழலில், கப்பல்கள் நீண்ட நாட்களுக்கு அங்கேயே நிறுத்தப்பட்டால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு கொண்டு வர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. எரிவாயு விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.