BREAKING: கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி… அதிர்ச்சி… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை….!

By Nanthini on வைகாசி 31, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-லிருந்து 17 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விஷச்சாராயத்தை குடித்த 3 பேர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, கள்ளச்சாராயத்தைக் காய்ச்சி சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உட்பட 8 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளது.

அதேவேளையில், தங்கள் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறியதாகவும், கடமை தவறியதாகவும் காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) உட்பட 22 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.