ஐயோ கொடுமையே… கல்யாணத்துக்கு இன்னும் நேரம் இருக்கு என்ற… பெற்றோரின் வார்த்தையால்… விபரீத முடிவெடுத்த 16 வயது மாணவன்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on ஆவணி 29, 2026

Spread the love

விஜயநகரம் மாவட்டம், ஸ்ரீகவரப்புக்கோட்டை மண்டலம், சீதிபாளலம் கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நாக மணிகண்டா (16) என்ற சிறுவன் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்டர்மீடியட் தொழிற்கல்வி பயின்று வந்தார்.

அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், தன்னை அவளுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்குப் பெற்றோர், “நீ இன்னும் சிறுவன்… திருமணம் செய்வதற்கு உனக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது” என்று கூறி அவருக்கு அறிவுரை வழங்கி மறுத்துள்ளனர்.

   

பெற்றோரின் இந்த பதிலால் கடும் மனவேதனை அடைந்த நாக மணிகண்டா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் திருமணத்திற்கு அவகாசம் கேட்டபோது பெற்றோர் மறுத்ததால், ஒரு சிறுவன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.