சாலை விபத்துகள் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன் அதிகமாக தான் நடக்கிறது. ஒரு ஆண்டிற்கு சராசரியாக இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேல் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. அதில் ஒன்று அரை இலட்சம் பேர் உயிரிழந்து போகின்றனர். இந்த கணக்குப்படி ஒரு நாளைக்கு சுமார் கிட்டத்தட்ட 500 பேர் சாலை விபத்தினால் இறக்கின்றனர். இதை கட்டுப்படுத்த ஒரு புதிய சாதனத்தை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார் ஜெய்ப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி. அவரது கண்டுபிடிப்பு என்ன அவர் யார் என்பதை பற்றி இனி காண்போம்.
ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் மான்சிங் வித்யாலயாவின் 16 வயது மாணவி வனிஷா கேதார்பால். அவர் வயது ஒத்துடைய பிற குழந்தைகள் ஊடகங்களில் பிசியாக இருந்த வேலையில் இவர் தனது AI இயங்கும் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறார். ஒரு நாள் வீட்டில் இரவு உணவு உண்ணும் போது சாலை விபத்து பற்றிய செய்திகளை பார்த்து பாதிப்படைந்தார். அதை தடுக்க என்ன செய்யலாம் என்பதை தனது தந்தை கௌரவ் கேதார்பால் மற்றும் தாயார் ஜோதி குருவராவுடன் கலந்து ஆலோசித்தார்.
வனிஷாவின் தாயார் PhD பட்டம் பெற்றவர். ரெஸிக்குலர் ஆட் ஹோக் நெட்வொர்க் பற்றி அவரது தாயார் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததால் உலக சாலை பாதுகாப்பு சிக்கல்களுக்கு தொழில்நுட்ப அறிவையும் சேர்த்து பயன்படுத்தி எதையாவது கண்டுபிடிக்கலாம் என்று வனிஷா உணர்ந்தார்.
வனிஷா டிசம்பர் 2022 இல் தனது ஆராய்ச்சியை தொடங்கினார். 2 வருட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இந்த வருடம் தான் சாலை பாதுகாப்பை மேம்படுத்த AI கட்டுப்பாட்டை கொண்ட ஒரு சாதனமான SurekshaAI யை வனிஷா கண்டுபிடித்தார். இவரது SurekshaAI இயாங்குதளமானது சாலை பாதுகாப்பில் தனித்துவமான கவனம் செலுத்துகிறது. படங்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து புகார் அளிக்கும் விதமாக இது செயல்படுகிறது.
SurekshaAI இன் மற்றொரு முதன்மை தயாரிப்பு ஆனது விஷன் காடு ஆகும். இது GenAI இயங்கு அமைப்பாகும். சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதற்கு பெரும்பாலான காரணம் ஓட்டுநர்கள் கண்களுக்கு தெரியாமல் இருக்கும் Blind Spots ஆகும். இந்த சுரக்ஷா எஐ விஷன் கார்டினால் மோஷன் லேர்னிங், அல்ஹரிதம், கேமராக்கள் மற்றும் எல்.இ.டி டிஸ்ப்ளே ஆகியவற்றின் மூலம் நிகழ் போக்குவரத்தின் போது ஏதாவது Blind Spots தெரிந்தாலும் விபத்து ஏற்படும் போல் இருந்தாலும் சிவப்பு சமிக்கை மூலம் ஓட்டுநர்களை இது எச்சரிக்கிறது. இது விபத்துக்களை தடுக்க பெரும் அளவு உதவுகிறது என்று வனிஷா கூறியிருக்கிறார்.
இந்த சாதனத்தை கண்டுபிடிக்க வனிஷா பல தடைகளை சந்தித்து இருக்கிறார். இந்த சாதனத்தை உருவாக்க ரூபாய் 25 ஆயிரம் செலவிட்டு இருக்கிறார். தற்போது குறைவான மலிவு விலையில் அனைவரும் வாங்கும் படியான விலையில் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் வனிஷா. இவரது இந்த சாதனம் டெக் எக்ஸ்போ 2024 ஜூனியர் பிரிவில் மக்கள் தேர்வு விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் கூகுள் நிறுவனத்தால் நடைபெற்ற மாநாட்டிற்கு வனிஷா அழைக்கப்பட்டார். இவரது விஷன் கார்டு ஹார்டுவேர் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் விஷன் கார்டை மலிவான விலையில் அனைவரும் வாங்கும் படியாக அளவிற்கு மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று வனிஷா கூறி அனைத்து மாணவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்.