கோயம்புத்தூர் மாநகரில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு, தந்தை வயதுடைய வீட்டு உரிமையாளரே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த அந்த மாணவி, தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளரான 52 வயது ரவிக்குமார் என்பவர் மர வியாபாரம் செய்து வருகிறார். தனது தந்தையின் வயதுடையவர் என்பதால், அந்த மாணவி ரவிக்குமாரிடம் மிகுந்த நம்பிக்கையுடனும் சகஜமாகவும் பழகி வந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அந்த மாணவி, அடிக்கடி ரவிக்குமாரின் வீட்டிற்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் இணைந்து ‘ரீல்ஸ்’ வீடியோக்களை எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரின் குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து, மாணவி அங்கு சென்றுள்ளார். அப்போது சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ரவிக்குமார் அந்த மாணவியைக் கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரச் செயலால் நிலைகுலைந்து போன மாணவியை, நடந்ததை யாரிடமாவது சொன்னால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரவிக்குமார் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி வீட்டிற்குச் சென்று யாரிடமும் பேசாமல் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் தனது மகள் திடீரென முடங்கிக் கிடப்பதைக் கண்டு சந்தேகமடைந்த பெற்றோர், அவரிடம் பொறுமையாகக் கேட்டபோது, நடந்த கொடுமைகளை அந்த மாணவி கண்ணீர் மல்க விவரித்துள்ளார்.
மகளின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கோவை மாநகர கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமான போக்சோ (POCSO) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக முயன்ற ரவிக்குமாரைக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…