ஹைதராபாத் பால்கம்பேட்டை பகுதியில் உள்ள விடுதி அறையில், ஹர்ஷியா சுல்தானா (16) என்ற இன்டர்மீடியட் முதலாமாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி இளைஞர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த கல்லூரி நிர்வாகம், இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாணவியின் தாயார் அவரைக் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ஹர்ஷியா சுல்தானா, தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த எஸ்.ஆர். நகர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
