அடியாத்தி…! என்ன இது…? ஒரே காரில் 16 பேர்…! டிக்கி வரை ஆட்களை அடைத்து அட்டூழியம்… அதிகாரிகளின் ஊழலை தோலுரித்த கார் ஓட்டுநர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2026

Spread the love

உத்தராகண்ட் போன்ற மலைப் பகுதிகளில் போதிய அரசுப் பேருந்து வசதிகள் இல்லாததால், டெல்லி-என்சிஆர் வரை இயங்கும் தனியார் டேக்ஸிகளையே மக்கள் பெருமளவில் நம்பியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, 7 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ‘எர்டிகா’ காரில், இருக்கைகள், பயணிகளின் மடி மற்றும் காரின் பின்பக்க டிக்கி வரை சுமார் 16 பேரைத் திணித்து ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்லும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், காரைப் பிடித்த டெல்லி போக்குவரத்து அதிகாரிகள் ரூ.5,000 லஞ்சம் கேட்டதாகவும், தான் ரூ.2,000 கொடுத்துவிட்டுத் தப்பித்து வந்ததாகவும் அந்த காரின் ஓட்டுநர் வீடியோவில் ஒப்புக் கொண்டுள்ளார். விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு மீண்டும் சாலைக்கே அனுப்பி வைக்கும் அதிகாரிகளின் இந்த ஊழல் அமைப்பே, இதுபோன்ற பெரும் விபத்துகளுக்கும் உயிர்ப்பலிகளுக்கும் முக்கியக் காரணம் எனச் சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.