டெக்ஸ்டைல், ஹோட்டல் முதல் ஏர்லைன் வரை.. டாடா குழுமத்தின் 150 ஆண்டு கால வளர்ச்சி பற்றி தெரியுமா..? பலரும் அறியாத தகவல்கள்..

By Priya Ram

Updated on:

டாடா குழுமம் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் செயல்பாட்டை சுதந்திரத்திற்கு முன்பு, சுதந்திரம் கிடைத்ததில் இருந்து 1991-ஆம் ஆண்டு வரை, 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரை எனும் மூன்று சூழல்களாக பிரிக்கலாம். கடந்த 1968 ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி நுஸ்சர்வான்ஜி டாடா 21,000 முதலீட்டில் டாடா குழுமத்தை தொடங்கினார்.

   

முன்னதாக 1874-ஆம் ஆண்டு டெக்ஸ்டைல் மில், 1903-ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல், 1907-ஆம் ஆண்டு டாடா ஸ்டீல், 1910-ஆம் ஆண்டு மின்சாரம், 1917-ஆம் ஆண்டு நுகர் பொருட்கள், 1932-ஆம் ஆண்டு டாடா ஏர்லைன் என அடுத்தடுத்த தொழில்களை தொடங்கி டாடா குழுமம் வெற்றி கண்டது.கடந்த 1953-ஆம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்டதால் விமான போக்குவரத்து துறையில் டாடா குழுமத்தால் பல ஆண்டுகள் செயல்பாட்டை தொடங்க இயலவில்லை.

இதே போல கடந்த 1977-79 ஆண்டுகளுக்கு இடையே டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேசியமயமாக்கும் திட்டத்தை அப்போதைய அரசு திட்டமிட்டது. ஆனால் ஸ்டீல் நிறுவனங்களை இணைத்து பொதுத்துறை நிறுவனமாக்கி அதற்கு ஜே.ஆர்.டி டாட்டாவை தலைவராக நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. ஆனால் டாடா ஸ்டீல் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேசிய மையமாகும் நடவடிக்கையை அரசு நிறுத்தியது.

தொழில் மட்டும் இல்லாமல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (பெங்களூரு), டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (மும்பை), டாடா இன்ஸ்டியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் (மும்பை), டாடா மெமோரியல் சென்டர் (மும்பை) என பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை தொடங்கியது. மேலும் விளையாட்டு துறையிலும் அகாடமிகளை உருவாக்கி வீரர்களை உருவாக்கியது.

டாடா உலகின் முக்கியமான குழுமமாக இருக்கும் டாடாவை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் அதிக பங்குகளை வைத்திருப்பவர்கள் என யாருமே இல்லை. டாடா சன்ஸ் என்னும் நிறுவனம்தான் டாடா குழும நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பிரத்தியேக தலைமை செயல் அதிகாரிகள் தலைவர்கள் வழி நடத்தினாலும் டாட்டா சன்ஸ் எடுக்கும் முடிவுதான் உறுதிப்படுத்தப்படும்.

author avatar
Priya Ram