மால்டா மாவட்டம் ரதுவா-I பிளாக்கிற்கு உட்பட்ட மகானந்தடோலா கிராம பஞ்சாயத்தின் முலிராம் தோலா பகுதியில் அமைந்திருந்த சுமார் 150 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில், கங்கை நதியின் கடும் கர அரிப்பால் ஆற்றில் மூழ்கி முற்றிலும் அழிந்தது.
கிராம மக்களின் ஒரே வழிபாட்டுத் தலமாக விளங்கிய இக்கோவில், நதியின் தொடர் கர அரிப்பைத் தாங்க முடியாமல் மக்கள் கண்முன்னேயே சரிந்து தண்ணீரில் மூழ்கியது. இதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் கிராம மக்கள் கண்ணீருடன் நின்ற காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/nextminutenews7/status/2096908207214199174/video/1
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் நதி அரிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் வீடுகள், விளைநிலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் என பலவும் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றன.
