திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதையும், தற்போது அவருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண வயிற்று வலி அல்ல, பிரசவ வலி என்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அச்சிறுமியிடம் 10-க்கும் மேற்பட்டோர் தொடர் பலாத்காரத்தில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முத்தழகுபட்டியைச் சேர்ந்த வேளாங்கண்ணி (45), கிழக்கு ரத வீதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) உட்பட பலரது விவரங்கள் தெரியவந்துள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…