அகமதாபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், தனது தாயார் தன்னை அடிக்கடி தாக்கி, அவமானப்படுத்துவதாகவும், வீட்டு வேலைகளைக் கட்டாயப்படுத்திச் செய்வதாகவும் கூறி குஜராத் உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். இவரது பெற்றோர் 2020-இல் விவாகரத்து பெற்றவர்கள். தாயாரின் அரவணைப்பில் வசித்து வந்த சிறுவன், தனது தந்தை அங்கோலாவில் பணிபுரிவதால், தான் பாதுகாப்பாக உணரும் மோர்பியில் உள்ள தனது தாத்தா-பாட்டியுடன் வரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சி. தியாகி தலைமையிலான அமர்வு, அகமதாபாத் நகர காவல்துறை மற்றும் குழந்தை நலக் குழு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுவனின் முந்தைய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து டிசம்பர் 28-க்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயார் தன்னைக் கத்தியால் தாக்க முயன்றதாகவும், இதுகுறித்து சார் கேஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சிறுவன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஜுவெனைல் ஜஸ்டிஸ் சட்டம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா (BNSS) விதிகளின் கீழ் தனது தாயார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
