“நான் உங்க தங்கச்சி மாதிரி என்ன விட்ருங்க”… 14 வயது சிறுமியின் உடல் முழுவதும்…. அக்காவின் காதலனே செய்த அசிங்கம்….!

Spread the love

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமியின் மூத்த சகோதரி, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (21) என்ற வாலிபரை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்ததால், சிலம்பரசன் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, கடந்த மார்ச் 9-ஆம் தேதி பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை, தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிலம்பரசன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை அழைத்துச் சென்ற சிலம்பரசன், பெரம்பூரில் அவருக்குப் புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்ததுடன், பட்டாளம் பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் குளிர்பானமும் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், ஓட்டேரி தேவராஜ் தெருவில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சிறுமியை அழைத்துச் சென்ற அவர், அங்கு வைத்து ஆசை வார்த்தைகளைக் கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இக்கொடூரச் செயலை அரங்கேற்றிய பிறகு, சிறுமியை அவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

வீடு திரும்பிய சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைக் கண்டு சந்தேகமடைந்த சிறுமியின் தாயார், மகளின் ஆடைகளைக் களைந்து சோதித்தபோது, அவரது உடலில் நகக்கீறல்களும், கடித்த வடுக்களும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். தாயார் விசாரித்தபோது, சிலம்பரசன் செய்த பாலியல் அத்துமீறலை அந்தச் சிறுமி கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டுப் பதறிப்போன சிறுமியின் தாயார், உடனடியாகப் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியின் தங்கையையே வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்த இந்தச் சம்பவம், வியாசர்பாடி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“தலை முடியை பிடித்து இழுத்த தாய்…” எட்டி உதைத்த வளர்ப்பு தந்தை… லிப்டில் சிறுவனுக்கு நடந்த கொடுமை…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

மலேசியா நாட்டின் கெடா மாநிலம் அலா ஸ்டார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு லிஃப்ட்டிற்குள், குழந்தைக்கு வாங்கிய பிராம் வண்டி…

14 minutes ago

சிக்னலில் நின்றவர்களை அடித்து தூக்கிய லாரி…! துடிதுடித்து இறந்த மாணவி… தூக்கி வீசப்பட்ட வாகனங்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

வெனிசுலா நாட்டின் அபுரே மாகாணத்தில் உள்ள சான் பெர்னாண்டோ பகுதியில், பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சிக்னல் சந்திப்பில்…

27 minutes ago

“சிலை கரைப்பின் போது ஆற்றில் இறங்கிய இளைஞர்கள்…” சப்-இன்ஸ்பெக்டர் அறைந்ததால் வெடித்த பெரும் சர்ச்சை… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில், சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆற்றில் இறங்க முயன்ற இளைஞர்களைக் காவல் ஆய்வாளர்…

33 minutes ago

“பைக் ஓட்டி சென்றபோது திடீரென வெடித்த செல்போன் பேட்டரி…” தூக்கி வீசப்பட்டு நபர் பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்… பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரின் செல்போன் பேட்டரி திடீரென வெடித்ததில், அவர் பைக்கிலிருந்து தூக்கி…

39 minutes ago

“கையில் மனைவியின் தலை…” வீதியில் உலா வந்த கணவர்… தந்தையும் தீர்த்து கட்டிய கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

மேற்குவங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் சோனாமுகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியைத் தலை துண்டித்துக்…

57 minutes ago

“வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்…” கடைக்குள் புகுந்து சிறுவனை கத்தியால் குத்திய கொடூரம்… ரத்த வெள்ளத்தில் துடித்து நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தலேகான் தாடே பகுதியில் உள்ள சிவாஜி சௌக் அருகில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம்…

1 மணத்தியாலம் ago