மேற்கு வங்க மாநிலத்தில் 8-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், ஒரு கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் 1:30 மணியளவில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான சிம்ரன் தமாங் என்ற பெண் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் பயணித்த காரிலேயே சிறுமிக்குத் தெரியாமல், அவர் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து மற்றும் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர். அதனைப் பருகிய சிறுமி, சிறிது நேரத்தில் தன் சுயநினைவை இழந்துள்ளார். அதன் பின்னர், அந்தக் கும்பல் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
கொடுமையின் உச்சமாக, சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியைச் சாலையோரம் வீசிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. பின்னர், அங்கு வந்த சிலர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…