ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் கவினின் ‘ஸ்டார் வரை’.. இந்த ஆண்டு வெளியாக உள்ள 14 திரைப்படங்கள்..

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை தற்போது பல படங்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் ரசிகர்களுக்கு மாபெரும் வேட்டையாக அமையும் அளவிற்கு மாபெரும் பிரம்மாண்ட படங்களை தற்போது இயக்கி கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடமாக எந்த படமும் தமிழில் சரியா போகாமல் இருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு சேர்த்து வைத்து மொத்தமாக திரையரங்கையே தெறிக்கும் அளவிற்கு படங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னால் வெளி மாநிலங்கள் ஆன தெலுகு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் கடந்த இரண்டு வருடமாக மிகச் சிறந்த படங்களை எடுத்து வெளியிட்டு, இப்படங்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று அளவிற்கு தமிழில் மோசமான படங்களாக வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வருடம் சூப்பர் ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை கிட்டத்தட்ட பத்து மெகா பஸ்டர் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில்,

   

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே ஞானவேல் அவர்கள் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் தலைவர் 171 “வேட்டையன்”. அதன் பின்னதாக 96 இல் வெளியாகி தற்போது பல வருடம் கழித்து மீண்டும் மெகா ஸ்டார்கள் ஆன கமல்ஹாசன் மற்றும் சங்கர் இணைந்து இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் இந்தியன் 2. அடுத்து, விஜய் அவர்கள் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துக் கொண்டிருக்கும் படம் தான் கோட். இப்படம் நீண்ட எதிர்பார்ப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

அஜித் நடிப்பில் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் தான் விடா முயற்சி, தற்போது இப்படம் கோடை மாதத்திற்கு பின் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் தான் கங்குவா, இப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று இயக்குனர் தரப்பிலிருந்து தெரிவித்து இருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் படம் தான் தங்கலான். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் அமரன்.

அதற்கு அடுத்ததாக, தனுஷ் அவரை எழுதி இயக்கும் படமானது தான் “ராயன்”. தற்போது இன்னொரு படமான குபேரன் படமும் இப்படத்துடன் இணைந்து இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்று தகவல் தெரிவித்திருக்கிறார்கள். கார்த்தி நடிப்பில் மெய்யழகன் மற்றும் வாத்தியார் என்று இரு படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் தெரிவித்திருக்கிறார்கள். விஷால் நடிப்பில் ரத்தினம் படம் தற்போது தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் தான் மகாராஜா மற்றும் விடுதலை படமாகும். ஜெயம் ரவி நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் தான் Brother மற்றும் காதலிக்க நேரமில்லை. கடைசியாக சுப்ரீம் ஸ்டார் கவின் அவர்கள் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் ஸ்டார். இப்படமும் இந்த ஆண்டுதான் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட இந்த ஆண்டு 14 மெகா நாயகர்களின் படம் வெளியாக உள்ளது.

author avatar
Ranjith Kumar