ஐயோ நெஞ்சே பதறுது… பள்ளிக்கு லேட்டா வந்த சிறுமியை 100 தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியர்… அன்று மாலையே நடந்த சோக சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 17, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகா பகுதியில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி ஹன்சிகா பள்ளிப் பையுடன் 100 முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. மாலை வீடு திரும்பிய போது சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து சிறுமிக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் பலனளிக்காமல் நேற்று முன்தினம் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தண்டனைக்கு பிறகு தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும் குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீஸ் சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.