திடீரென வயிற்று வலியால் துடிதுடித்த 13 வயது சிறுவன்… ஸ்கேனில் தெரிந்த 80 முதல் 100… மருத்துவர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் ஆன்லைன் பொருட்களை பயன்படுத்தக்கூடிய பழக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து யாரும் அறிவதில்லை. தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது நியூசிலாந்தில் 13 வயது சிறுவன் ஆன்லைன் தளத்தின் மூலமாக அதிக சக்தி வாய்ந்த காந்தங்களை வாங்கி அதனை பலமுறை விழுங்கியதால் தீவிர சுகபாதை ஏற்பட்டது. வயிற்று வலியால் துடிதுடித்த அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டான். இதனை தொடர்ந்து சுமார் 80 முதல் 100 சிறிய காந்தங்கள் சிறுவனின் குடலில் ஒட்டிக்கொண்டதை மருத்துவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதனை முழுமையாக அகற்ற முடியாத நிலை இருந்ததால் குடலின் ஒரு பகுதியை அகற்றும் நிலை ஏற்பட்டது. 2014 முதல் நியூசிலாந்தில் வீட்டு பயன்பாட்டுக்கான சிறிய சக்தி வாய்ந்த காந்தங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டாலும் டெமு போன்ற பிரபல ஆன்லைன் தளங்கள் மூலமாக இந்த பொருட்களை ஆர்டர் செய்ய முடிவதால் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அவசியமாகியுள்ளது. இந்த சம்பவம் டிஜிட்டல் உலகின் சுதந்திரம் குழந்தைகளின் பாதுகாப்பை சோதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பெரும்பாலும் சிறுவர்கள் ஆன்லைன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என எச்சரிக்கின்றனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது