125 சட்டப்பேரவை தொகுதிகள், ஆட்சியில் பங்கு… ஸ்டாலின் தலையில் குண்டை போட்ட காங்கிரஸ்?… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதால் ஸ்டாலினுக்கு அது பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதும் இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட இருப்பதாகவும் சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் போட்டியிட 125 சட்டசபை தொகுதிகளை அடையாளம் காண கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட 125 தொகுதிகளை அடையாளம் காண காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

   

அவை எந்தெந்த தொகுதிகள், அதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது, கூட்டணியில் கேட்கும் தொகுதிகள் கிடைக்காமல் வேறு தொகுதிகள் வழங்கப்பட்டால் அங்கெல்லாம் எப்படி பணியாற்றுவது என்பது குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதே சமயம் 125 சட்டசபை தொகுதிகள் மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் புதுவிதமான திட்டம் தீட்டி வருவதாகவும் தெரிகிறது.