தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA), டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தினகரன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் அமமுக தனது சொந்தச் சின்னமான ‘குக்கர்’ சின்னத்திலேயே போட்டியிடும் என்று டி.டி.வி. தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
