ஆந்திராவில் நடந்த ஒரு அசாதாரண சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 11 வயது சிறுவன் ஒருவன் தன் தாயிடம் படிக்க சொல்வதைப் பற்றி போலீசில் புகார் அளித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவன், என்னுடைய அம்மா எப்போதும் படிக்க தான் சொல்லிக்கிட்டே இருக்காங்க. இது ஒரு பெரிய தொல்லையாக இருக்கு என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளான். வழக்கமாக திருட்டு மற்றும் சாலை விபத்து போன்ற புகார்களை கையாளும் போலீசாருக்கு இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் மாணவனின் தாயை விசாரித்த போது, thaai கணவனை பிரிந்து இரண்டு பிள்ளைகளையும் தனியாக வளர்த்து வரும் பெண் என்று தெரிய வந்துள்ளது. குடும்பத்தை நடத்துவதற்கு கடையில் வேலை செய்யும் அந்த தாய் இளைய மகனை நன்றாக படிக்க சொல்லும் ஆசையுடன் செல்போனும் கொடுத்துள்ளார். ஆனால் அதை விளையாட்டுக்கு பயன்படுத்துவதால் தாய் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
பிறகு காவல் உதவி கமிஷனர் சிறுவனை தனியாக அழைத்து, உன் அம்மா உன் எதிர்கால நலனுக்காக மட்டுமே படிக்க சொல்கின்றார், நீ நன்றாக படிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என அன்போடு பொறுமையாக விளக்கிக் கூறினார். இதனால் மனம் மாறிய மாணவன் நிச்சயமாக நன்றாக படிப்பேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு சென்றார். விஜயவாடாவில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்ற கத்திகுத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல்…
பெங்களூரு பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் - பிரியா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…
பெங்களூரு அபிகெரே பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, ஒரு இஸ்லாமிய இளைஞரை நோக்கி இனவெறி மற்றும்…
தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் நேர்மையை நிலைநாட்டும் ஒரு வலிமையான அறிவியல் ஆயுதமாக இந்த "அழியாத மை" (Indelible Ink) திகழ்கிறது.…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…
தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…