பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜுர் (Bajaur) மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதல் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட வாகனத்தை ஆயுதப்படை சோதனைச் சாவடி மீது மோதவிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில், 11 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள இந்தப் பகுதியில் சமீபகாலமாக பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
