வயிற்றில் ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மாணவன்… பட்டப் பகலில் பள்ளியிலேயே நடந்த கொடூரம்… வெறி செயலில் ஈடுபட்ட ஜூனியர் மாணவர்கள்…!

Spread the love

இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவிலான வன்முறை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் புனேவில் ஒரு சிறுவன் மூன்று பேரால் குத்தி கொலை செய்யப்பட்டான். அந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் வைத்தே பத்தாம் வகுப்பு மாணவனை எட்டாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அகமதாபாத்தில் கோக்ராவில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நயன் என்ற மாணவருக்கும் இவருடைய ஜூனியர் மாணவர்களுக்கும் ஏதோ சிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் பள்ளி மணி அடித்தவுடன் வீட்டிற்கு திரும்புவதற்காக நயன் தனது பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது அவரை வழிமறித்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறிய நிலையில் அந்தக் கூட்டத்திலிருந்து சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நயன் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் நயன் தனது வயிற்றில் கையை வைத்துக்கொண்டு காயத்தை மூடிக்கொண்டு பள்ளிக்குள் நடந்து செல்வது தெரிகிறது.

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் பள்ளியின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் சென்று ஒளிந்து கொண்டு உள்ளார். உடனே சம்பவி இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனை கைது செய்த விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

5 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

5 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

5 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

5 மணத்தியாலங்கள் ago