BREAKING: செல்போன் வாங்க ரூ.10,000 உதவித்தொகை… சற்றுமுன் தமிழக அரசு அறிவித்தது….!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

தமிழகத்தில் மின் நுகர்வு கணக்கெடுக்கும் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மொபைல் ஆப் (App) மூலம் மின்சார ரீடிங் எடுக்கும் சுமார் 7,500 கணக்கீட்டாளர்களுக்கு (Assessor) புதிய செல்போன் வாங்குவதற்காக ₹10,000 உதவித்தொகை மற்றும் சி.யு.ஜி (CUG) சிம் கார்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போனுக்கான நிதியுதவி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்றும், இதன்மூலம் கணக்கீடு செய்யும் பணிகள் மிகவும் எளிமையாகவும் துரிதமாகவும் மாறும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.