இந்தியாவுக்கு 100% வரி ரத்து… டிரம்ப் கொடுத்த ஹேப்பி நியூஸ்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 17, 2026

Spread the love

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் சொந்த நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தாலும், சமீபகாலமாக ரஷ்யாவுடன் அவர் காட்டி வரும் சுமுகமான நட்புறவே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

உக்ரைன் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு, இந்த வரி ரத்து நடவடிக்கை மிகப்பெரிய நிதி நிவாரணத்தையும், சர்வதேச அளவில் பெரும் நிம்மதியையும் அளிக்கும் முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.