தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கியதில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், மத்திய அமலாக்கத்துறை தற்போது இந்த வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்று ஆய்வு செய்து வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, முக்கிய நபர்களான பி.டி. அரசகுமார் மற்றும் முன்னாள் பள்ளி இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் விரைவில் சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
