திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கினை ரத்து செய்யக் கோரி முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் பின்னணியில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய PT அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முறைகேடு தொடர்பான குற்றப்பிரிவு வழக்கை நிராகரிக்கக் கோரும் அன்பில் மகேஸின் மனு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
