“என்ன பாப்பா இது…?” 18 மாத குழந்தையை தள்ளி கொன்ற 10 வயது சிறுமி… மும்பையில் நெஞ்சை உறைய வைக்கும் கோர சம்பவம்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 15, 2026

Spread the love

மும்பை கிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், 10 வயது சிறுமி செய்த கொடூரச் செயலால் 18 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 10 வயது சிறுமி ஒருவர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் பச்சிளம் குழந்தையைத் தனது கைகளால் தூக்கிச் சென்று கட்டிடத்தின் காற்றோட்டக் குழியில் கீழே தள்ளியுள்ளாள்.

இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பச்சிளம் குழந்தை குழிக்குள் விழுந்து உயிரிழந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர். சிறு வயதுடைய சிறுமி ஒருவர் இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட விதம் இணையத்தில் நெட்டிசன்களிடையே கடும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.