ஆகஸ்ட் 15-க்குள் 10 MLA-க்கள் ராஜினாமா?…. ‘ஆபரேஷன் L’ மூலமாக அதிமுகவை காலி செய்யப் போகும் தவெக?… தமிழக அரசியலில் அடுத்த அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆடி 13, 2026

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் எல்’ (Operation L) என்ற ரகசியத் திட்டத்தின் கீழ் தவெக இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளைத் துறக்கக்கூடும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த கூடுதல் எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்த தகவல் தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையையும், அஇஅதிமுகவிற்குப் பலத்த பின்னடைவையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.