அண்மையில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவைச் சேர்ந்த மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ள சூழலில், மேலும் 10 பேருடன் மொத்தம் 16 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 16 தொகுதிகளிலும் தவெக வெற்றிபெறும் பட்சத்தில், எந்தவொரு கூட்டணி தோழமையின் தயவும் இன்றி, சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் தவெக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரும் கணக்கு இதன் பின்னணியில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசலையும், தவெகவை நோக்கி நகரும் மக்கள் ஆதரவையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி, தங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்ள தவெக வகுத்துள்ள இந்த உத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தல்களைத் தமிழக அரசியலின் மிக முக்கியமான திருப்புமுனையாக மாற்றியுள்ளது.
